இன்றைக்கு நம்மில் பலரும் பாட நினைப்பது...
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால்விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால்விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
ஆதாரமில்லை அம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லை அம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரமில்லை அம்மா வானகம் செல்ல
ஒருநாளும் நான் இதுபோல் அழுதவனல்ல -அந்த
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
டயலாக்: வெந்த புண்ணில் வேல் பாச்சுவது என்பது இது தான்...
காஞ்சி போன பூமி எல்லாம்
வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்
அந்த நதியை காஞ்சி போயிட்டா....
துன்பபடரவங்க எல்லாம் அவங்க கவலையை
தெய்வத்துக்குகிட்டே முறை இடுவாங்க
ஆனா தெய்வமே கலங்கி நின்னா
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?
தான் ஆடவில்லை அம்மா சதை ஆடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மணம் என்பது
அதில் பூ நாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளமிது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடிதாங்குமா
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
படம்: தங்கப்பதக்கம்
No comments:
Post a Comment
Please post your comments here.....